Wednesday, December 7, 2011

தோப்புக்கரணம் போடுவது எதற்கு?

பிள்ளையாருக்கு முன் நாம் தோப்புக்கரணம் போடும் முறை பல நூறாண்டுகளாக இருந்து வருகிறது. தவறு ஏதேனும் செய்யும் பிள்ளைகளை பல வீடுகளில் தோப்புக்கரணம் போட சொல்வது மரபு. இந்த மரபை நாம் இப்போது இழந்து வருகிறோம் என்பது வருந்தத்தக்கது.

வெறும் மதம் அல்லது கடவுள் நம்பிக்கை சார்ந்தது மட்டும் அல்லது தோப்புக்கரணம் போடுவது. நம் முன்னோர்களின் அனைத்துப் படைப்புகளின் பின்னும் அறிவியல் உள்ளது.

தோப்புக்கரணம் போடுவது எதற்காக?
        நமது மூளை இடது பாகம் வலது பாகம் என் இரு பாகங்களாக உள்ளது. இவ்விரண்டும் ஒவ்வொரு விதமான பணிகளை நமக்காக செய்கிறது. இடது பக்க மூளை logical எனப்படும் காரண காரிய விஷயங்களையும், வலது பக்க மூளை intuitive எனப்படும் உணர்வுப் பூர்வமான விஷயங்களையும் செயல் படுத்தும். இதை வைத்து தான் ஆண்களுக்கு இடது மூளையும்  பெண்களுக்கு வலது மூளையும் அதிகமாக வேலை செய்யும் என கூறப்படுகிறது. அனால் இவை இரண்டும் சம அளவில் வேலை செய்வதனால் நமது யோசிக்கும் திறன் நன்கு விளங்கி நாம் ஒரு சமதள வாழ்வை வாழ முடியும். மேலும் மூளை இயக்கப்படுவதால் நமது ஞாபக சக்தி நன்கு வளரும். இதற்காக உருவாக்கப்பட்ட சிறிய பயிற்சி தான் தோப்புக்கரணம்.

தோப்புக்கரணம் எவ்வாறு மூளையை செயல் படுத்துகிறது?
    நமது காதுகளில் சில acupuncture points எனப்படும் குத்தூசி மருத்துவப் புள்ளிகள் உள்ளன. இடது காதில் உள்ள குத்தூசி பருத்துவ புள்ளியானது வலது மூளையை இயக்கும். வலது காதின் குத்தூசி புள்ளி இடது மூளையை இயக்கும். இதனால் தான் தோப்புக்கரணம் போடும் போது காது மடலின் அடி பாகத்தை அழுத்துகின்றோம்


இவ்வாறு செய்வதினால் இடது மற்றும் வலது மூளையின் செயல் பாடுகள் சீராக இருக்கும்.

தோப்புக்கரணம் போடும் போது ஏன் மாற்றுக் கைகளினால் காத்து மடலை பிடிக்க வேண்டும்?
     தோப்புக்கரணம் ஒரு யோகா முறை. நாம் உட்கார்ந்து எழும் போது நமது உடம்பு சமநிலை அடைய வேண்டும். அல்லது நம்மால் இந்த பயிற்ச்சியை  சரியாக செய்ய இயலாது. மேலும், அதே கைகளினால் காத்து மடலை பிடிப்பதால் நாம் காத்து மடல்களில் அதிக அழுத்தம் கொடுக்க நேரிடும். குத்தூசி முறைகளில் நமது அழுத்த அளவு மிக முக்கியம். இவற்றை மனதில் கொண்டு தான் கைகளை மாற்றி காதுகளில் வைக்கிறோம்.

தோப்புக்கரணம் போடும் போது என் உட்கார்ந்து எழ வேண்டும்? வெறும் காதி மடல்களை மட்டும் அழுத்திக் கொள்ளலாமே?
     தோப்புக்கரணம் போடும் போது நாம் உட்கார்ந்து எழுகின்றோம். மேலும் அப்படி செய்யும் போது நாம் மூச்சு பயிற்ச்சியும் சேர்த்து செய்கின்றோம். ஆம் உட்காரும் போது மூச்சை நன்றாக உள்ளுக்குள் இழுத்துக் கொள்ள வேண்டும். எழும் போது நன்றாக மூச்சை வெளியில் விசா வேண்டும். இவ்வாறு செய்வதினால் நமது உடம்பில் உள்ள சக்கரங்களை நாம் தூண்டுகின்றோம். இதனால் உடம்பில் பிராண வாயு நன்றாக கலந்து நம்மை சுறுசுறுப்பாக்குகின்றது  .

பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவது எதற்காக?
      நமது முதல் தொடக்கத்தை எப்பொழுதும் பிள்ளையார் முன் தொடங்குவது நமது பழக்கம். அதனால் இந்த பயிற்சியை பிள்ளையார் முன் செய்வது பழக்கத்தில் உள்ளது.

தண்டனைக்காக அல்லது தவற்றிக்காக தோப்புக்கரணம் போடுவது எதற்கு?
    நமது பள்ளிகளில் தவறு செய்தால் தோப்புக்கரணம் போடா சொல்வது உண்டு. கவனக்குறைவோ அல்லது தவறோ மூளையை சரியாக இயங்க செயாமல் இருப்பதால் விளைவது. அதை சரி செய்யவே தோப்புக்கரணம் போடும் முறை தவறு செய்யும் குழந்தைகளின் மூளையை இயங்க செய்வதற்காய் வந்தது போய் இன்று பிரம்படி, கட்டிபோடுதல், வெய்யிலில் வாட்டுதல் என முன்னேறி(!) இருக்கிறது.

தோப்புக்கரணத்தின்   காப்புரிமை
     தோப்புக்கரணத்தின் உரிமையை  "Master Choa Kok Sui's Institute for Inner Studies at Manila" பெற்றுள்ளது


நாம் சொல்ல மறந்த அறிவியல் உண்மையை வெளி நாட்டவர் சொல்கிறார்கள் கேளுங்கள்
      தோப்புக்கரணத்திர்க்குப் பின்னால் அறிவியல் உண்டு என்பதை இன்று  விஞ்ஞானிகள் "Super Brain Yoga" என்று கூறுகின்றனர். இதற்கான சான்று இதோ.
Super Brain Yoga - India Rediscovered

இணைய தளத்தில் மேற்கோள்கள் 
குத்தூசி மருத்துவம் / Acupuncture
தோப்புக்கரணம் பெயர் காரணம்


இப்போதாவது தோப்புக்கரணம் போடுவது, காது குத்துவது போன்ற நமது பழக்கங்களை நமது குழந்தைகளுக்கும் பழக்கலாமே!

No comments: