Sunday, December 11, 2011

குளித்த பின் முதுகை ஏன் முதலில் துடைக்க வேண்டும்?



குளித்த உடன் முதலில் துடைக்கும் இடத்தில் மூதேவியும் அடுத்து துடைக்கும் இடத்தில் ஸ்ரீதேவியும் குடி இருப்பதாக சொல்லி முதலில் முதுகை துடைக்க வேண்டும் என பெரியவர் சொல்வர்.

கண்ணிற்கு தெரியாத முதுகில் உள்ள நீரை நாம் மிக கவனமாக துடைக்க வேண்டும். முதுகில் நீர் சரியாக துடைக்க படாமல் ஜலதோஷம் வர வாய்ப்புள்ளது. மேலும் புது துண்டினால் நீர் துடைத்தால் அதிக நீரை துடைக்க முடியும். இதன் மூலம் முதுகில் இருந்து உடம்பிற்குள் செல்லும் நீரை தடுக்கலாம்.

கண்ணிற்கு தெரியாத முதுகில் இருந்து அதிக நீரை துடைக்கும் காரணத்திற்காகவே முதலில் துடைக்கும் இடத்தில் மூதேவி குடி வருவதாக சொல்வர். யாரும் முகத்தில் அழகு கூட வேண்டும் என்று ஸ்ரீதேவியை தானே முகத்தில் வேண்டும் என்பர்! முதுகை சரியாக துடைக்காமல் நீர் இறங்கி நோய் வாய்ப்பட்டால் முகத்தில் ஸ்ரீதேவி எப்பபடி குடி இருப்பாள்?


No comments: